நீண்ட காலமாகவே கடல்பயணம் செய்ய வேண்டும் என்ற பேரவா மனதினுள் இருந்து வந்துள்ளது. தெரிந்த மனிதர்கள் யாருமே இல்லாத ஓர் பயணம். பேச வேண்டுமே என்று கடனுக்காக பேசி ஒலி மாசு ஏற்படுத்தும் போலி நபர்களின் தொடர்பு எல்லைக்கு அப்பால். கண்ணுக்கு எட்டிய திசையெங்கும் கடல்நீரின் நீல நிறமே நிறைந்திருக்க, காற்று, சூரியன், சந்திரன், மேகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் துணையன்றி வேறெந்த துணையும் இல்லாத தனிமையில் இனிமை காண மனம் விழைகையில்,
நான் வசிக்கும் அறையின் நான்கு சுவர்களுக்குள் என்னுடன் வாசம் செய்யும் அதே தனிமை, மிகவும் ஆக்ரோஷமான ஆழிப்பேரலை போன்ற இரைச்சலுடன் தன்னுள் என்னை மூழ்கடிக்க முயலுகையில்,
போலி மனிதர்களையும் என் தனிமையையும் தாண்டி மறுகரையில் எனக்கென காத்திருப்பது எதுவோ என்ற வியப்புடன் யோசிக்கையில், தினசரி வாழ்வும் கடல்பயணம் போன்றது தானோ?
தனிமை இத்தனை சத்தமாக ஒலிக்கும் சக்தி வாய்ந்ததென்று யார் கண்டது?
No comments:
Post a Comment