Wednesday, 9 March 2022

திருப்புமுனை

திருப்புமுனை - இந்த வார்த்தையைக் கண்டவுடன் நம் மனக்கண் முன் விரியும் காட்சி என்ன? 

திரையரங்கில் இருக்கையின் நுனியில் அமர்ந்து கண் இமைக்கவும் மறந்து, நாம் எதிர்பாராத விதமாக காட்சியின் ஓட்டம் செல்வதில் மெய்மறந்து இருப்பதா?

தலைமுடி நன்கு வளர்வதற்கான எண்ணெய் பயன்படுத்தியவர், உடல் எடை மெலிய மிகவும் சிரத்தையான பயிற்சி மேற்கொண்டவர், கடினமான தேர்வுக்கு படித்தவர் Before / After என்று வைத்திருக்கும் புகைப்படங்களா?

மனதிற்கு மிகவும் இனிமையான ஒருவர் நம் வாழ்வில் அடி எடுத்து வைத்த தினம்? அதே நபர் நம்மை block செய்து( மனதளவில் என்றாலும்) தொடர்பு எல்லைக்கு அப்பால் நம்மை நிறுத்தி வைத்த நாள்?

பல காலம் வாட்டி வதைத்த உடல் உபாதை, மன உளைச்சல் மாயமாய் மறைந்த தருணமா?

"இருக்குற இடம் தெரியாம வாழ்ந்துட்டு போய் றனும்" என்ற கொள்கையை சிரமேற்கொண்டு வாழும் ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும், கிமு / கிபி என்று கொண்டாடுகின்ற அளவு பிரம்மாண்டமான திருப்புமுனைகள் கனவில் கண்டாலும் சிரிப்புதான் வரும்.

திருப்புமுனை என்றால் இயக்குனர் சங்கர் திரைப்படம் போல பிரம்மாண்டமாகத்தான் இருக்க வேண்டுமா?

நின்று மூச்சு வாங்கக்கூட நேரம் இல்லாமல் Treadmill மேல் ஓடுவது போன்ற ஓர் வாழ்க்கையின் ஏதோ ஒரு பொழுதில், காற்று வாக்கில் ஒருவர் கேட்டு விட்டுச் செல்லும் ஒரே ஓர் கேள்வி - நாம் வாழக்கையை அணுகும் முறையை தலைகீழாய் புரட்டிப் போடுமானால், யாரும் நமக்கு மேடை போட்டு கை தட்டாவிட்டாலும், அது திருப்புமுனை தான்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் நாள், எனக்கும் என் mentor க்கும் இடையில் நடந்த உரையாடல் இது.

Me: "There are times when I do extremely amazing stuff that everyone in the organisation appreciates. And then there are times when I make the most obvious mistakes which even a child would know how to avoid. I'm equally capable of doing extraordinary things and an extremely sloppy job. I'm clueless how to arrive at a realistic level of self valuation".

My mentor: "What do you mean by sloppy job? Can you elaborate about the times when you did what you call as a 'sloppy job'?"

Me: "............... It's when I commit the most obvious mistakes, when my mind was running frantically from one thing to another, unable to focus on anything properly, when I'm so badly exhausted that I don't even realise that I need rest and keep pushing myself to do more...".

My mentor: "And why would you do that?"

Me: "…….….…....…............................."

நம்மால் பதில் கூற இயலாத வித விதமான கேள்விகளால் நம்மை திக்குமுக்காடச் செய்யும் பெருமை mentor களையே சேரும்.

"ஏதோ ஒன்று எனக்கு சரியாக செய்ய இயலவில்லை/ தெரியவில்லை" என்கிற நம்பிக்கையை வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், 

"இதனை சிறப்பாகச் செய்வதற்கு எனக்கு என்ன தேவை?" எனும் கேள்வி எழ, அந்த பதில் ஓய்வு/ தனிமை என எதுவாக இருப்பினும் மகிழ்ச்சியுடன் ஏற்கும் பக்குவம் எழுகிற அந்த நொடி, நிச்சயம் ஓர் திருப்புமுனை தான் :)

உங்கள் வாழ்வில், வேறு எவருமே அறிந்திராத மிகவும் சாதாரண நொடியாக கடந்து சென்ற அந்த திருப்புமுனை எது?


No comments:

Post a Comment

Relationships

If a bitter gourd does past life regression, it would see itself taking the form of human relationships. And in this lifetime, it has comple...